தொடர்ச்சியான முறையில் உடைவுக்குள்ளாகும் வட்டுவாகல் பாலத்தினூடாக அச்சத்துடன்
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அவலநிலை உருவாகியுள்ளது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன்
புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு
துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது.
இதனால் குறித்த வீதியுடனான
போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.
வீதி புனரமைப்பு
இதனையடுத்து சிலநாட்களுக்கு
பின்னர் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்திற்கு
விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வட்டுவாகல் பாலத்தின் நடுபகுதியால் மீண்டும் சிறு உடைவு
நேற்றையதினம் ஏற்பட்டதனை தொடர்ந்து மீண்டும் குறித்த வீதி தற்காலிக புனரமைப்பு
செய்யப்பட்டு போக்குவரத்து இடம்பெறுகின்றது.
எனவே அடிக்கடி குறித்த பாலம்
உடைவுக்கு உள்ளாவதனால் பயணத்தில் ஈடுபடும் பயணிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.
