வவுனியா (Vavuniya)- பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்
சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (8) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் லொறி ஒன்றை
வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது குறித்த லொறியில்
அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த பொலிஸார் 20 மாடுகளையும் கைப்பற்றி பொலிஸ்
நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
குறித்த மாடுகள் மல்லாவி பகுதியில் இருந்து
குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருந்நததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.
