Home இலங்கை சமூகம் சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பு : வவுனியா வர்த்தகர்களின் நிலைப்பாடு வெளியானது

சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பு : வவுனியா வர்த்தகர்களின் நிலைப்பாடு வெளியானது

0

    வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு
தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக
கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தீர்மானம்
எடுக்கப்படும் என வவுனியா வர்த்த சங்கத்தின் செயலாளர் ம.மயூரதன்
தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வவுனியா வர்த்தகர் சங்க பிரதிநிதிகளை தமிழரசு கட்சியின் பதில்
செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இது
தொடர்பில் வர்த்தகர் சங்கத்தின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

எழுத்து மூலமாக கடிதம்

இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு ஆதரவு கூறி தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்மை
சந்தித்திருந்தார். எனினும் எழுத்து மூலமாக கடிதம் கிடைக்கும் பட்சத்தில் எமது
சங்கத்தின் நிர்வாக சபை கூடி கனஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா
என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தாம் அவருக்கு
தெரிவித்திருந்ததாக கூறினார்.

இந்நிலையில் தம்மால் கடிதம் விரைவில் வழங்கப்படும் என தமிழரசு கட்சியின்
செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தமக்கு தெரிவித்து இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version