Home இலங்கை சமூகம் யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். (Jaffna) மாவட்டத்திலும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.

அந்தவகையில் யாழ். திருநெல்வேலிச் சந்தையில் இன்றைய தினம் (21.10.2024) பாவற்காய், பயிற்றங்காய் போன்றவற்றின் விலை கிலோ 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை அதிகரிக்கும்

கத்தரிக்காயின் விலை கிலோ 200 ரூபாவாகவும், மரவள்ளிக் கிழங்கு கிலோ 300 ரூபாவாகவும், பச்சைமிளகாய் கிலோ 350 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன. சீரற்ற காலநிலை தொடருமாயின் ஏனைய மரக்கறி வகைகளின் விலையும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த நாட்களில் வவுனியாவில் வெற்றிலை ஒன்றின் விலையும் 150 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன்
4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய பாக்கு ஒன்று 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வரும் பழுக்காத பாக்குகளை இரசாயனம் தடவி பழுத்த பாக்குகளாக சந்தைக்கு விநியோகம் செய்யும் கொள்ளையொன்று அம்பலமாகியுள்ள நிலையில்,

வவுனியா மக்களும் வியாபாரிகளும் யாழ்ப்பாண பாக்குகளை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

பாக்கு விலை உயர்வு மற்றும் பாக்கு தட்டுப்பாடு காரணமாக 50 ரூபாயாக இருந்த வெற்றிலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சூப்பர் வெற்றிலை என அழைக்கப்படும் வெற்றிலை பாக்கு பொதி ஒன்றின் விலை 200 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், அதில் வெற்றிலை பாக்கு உள்ளடங்களாக பல பொருட்களை உள்ளடக்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version