முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்ய உத்தரவு

சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவானது நேற்றைய தினம் (06) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு சாதாரண கார்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல்

அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல்

சுங்க வரி இழப்பு 

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்ய உத்தரவு | Vehicle Import In Sri Lanka

வாகனங்கள் கடத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு 140 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வருடாந்தம் வாகனம் ஒன்றிற்கு 25000 ரூபா வீதம் சொகுசு பொருட்களையும் அரசாங்கம் இழந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை 150 மேற்பட்ட சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சம்பந்தப்பெரும தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதியில் ஊழல் : அமைச்சுப் பதவியை துறக்கத் தயாராகிறார் நளின் பெர்னாண்டோ

முட்டை இறக்குமதியில் ஊழல் : அமைச்சுப் பதவியை துறக்கத் தயாராகிறார் நளின் பெர்னாண்டோ

பறிமுதல் செய்ய உத்தரவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனித் தரவில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட காரை முச்சக்கர வண்டி இலக்கத்தில் பதிவு செய்திருப்பதாக 7 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: பறிமுதல் செய்ய உத்தரவு | Vehicle Import In Sri Lanka

இந்நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 60 மேலதிக குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன், இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70வது பிரிவை மீறி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஊழல் குற்றத்திற்கு எதிராகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான் வாகனங்களை எதிர்வரும் பதின்மூன்றாம் திகதிக்கு முன்னர் சுங்கத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் கைப்பற்றி பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல்!

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்