Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

0

வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.

இது வாகன இறக்குமதியின் பின் இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் கிடைத்த வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை இந்த வருட இறுதிக்குள் அடைய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுக அனுமதி

சுங்கப் பிரிவில் இருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் பற்றிய தகவல்களையும் நேரடியாக அணுக அனுமதிக்கும் “Motor Vehicle Verification” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த சுங்கத் திணைக்களம் செயல்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version