Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நேற்று (09) ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நமது நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அமைச்சரவையின் தீர்மானம்

வாகன இறக்குமதி தொடர்பாக எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அவர் அங்கு அறிவித்தார்.
அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அப்படி குறிப்பிட்ட எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய அனுமதி உண்டு என்று விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று சில நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், அந்த இறக்குமதியைப் பற்றி முடிவெடுக்கும் போது, ​​நமது கையிருப்பு மற்றும் நமது பொருளாதாரம் மீது அக்கறை செலுத்தி, அணு அணுவாக முடிவு எடுக்கப்படுகிறது.

இல்லாமல், பொருளாதாரத்தில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த முடிவை எடுக்க நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version