Home இலங்கை சமூகம் கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

0

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து கங்காராம விகாரை ஏற்பாடு செய்துள்ள வெசாக் வலயம், பௌத்த சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள பௌத்தாலோக மாவத்தை வெசாக் வலயம் உள்ளிட்டவற்றுக்கே இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராக்கள்

குறித்த பிரதேசங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் வசதி கருதி கொழும்பு வெசாக் வலயங்களைப் பார்வையிட விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version