முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹிட்டான சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா முத்து?- அவரே சொன்ன பதில், ரசிகர்கள் ரியாக்ஷன்

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வருவது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

மற்ற சீரியல்கள் தான் குறைந்த பார்வையாளர்களை பெற்று வருகிறது. நிறைய புதுமுகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் 300 எபிசோடுகளை எட்டிவிட்டது.

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தான் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த்.

ஹிட்டான சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா முத்து?- அவரே சொன்ன பதில், ரசிகர்கள் ரியாக்ஷன் | Vetri Vasanth Leaving Siragadikka Aasai Serial

நடிகரின் லைவ் வீடியோ

முத்து-மீனா திருமணத்தோடு 300 எபிசோடுகளை சிறகடிக்க ஆசை தொடர் எட்டிவிட வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் லைவ்வில் வந்தார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு வந்தனர். அதில் ஒருவர், நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறகடிக்க ஆசை தொடரில் நடிப்பீர்களா இல்லை விலகுவீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், நான் இப்ப பேசுறதை நீங்க ரெக்கார்டு கூட பண்ணி வச்சுக்கலாம்.

KPY பாலா வாங்கிய விஷயம், பெருமையாக கூறிய அவரது தாயார்- என்ன தெரியுமா?

KPY பாலா வாங்கிய விஷயம், பெருமையாக கூறிய அவரது தாயார்- என்ன தெரியுமா?

ஏன்னா நான் இந்த சீரியலில் இருந்து எப்போதுமே விலக மாட்டேன். இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடம் ஒளிபரப்பானாலும் சரி அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் கதாநாயகனாக இருந்து கொண்டே இருப்பேன்.

இந்த சீரியல்தான் எனக்கு ஒரு மறு வாழ்க்கையை தந்தது.
வெப் சீரியஸ், திரைப்படங்கள் நடிக்கிறேன், ஆனால் அதையெல்லாம் தாண்டி சிறகடிக்க ஆசை சீரியல் தான் எனது மெயின் வேலை என தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.  

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்