Home சினிமா 10 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

வேட்டையன் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் கடந்த வாரம் 10ஆம் தேதி வெளிவந்த நிலையில் வசூலில் பட்டையை கிளப்பியது.

ஆனால், இரண்டாவது வாரம் துவங்கியதில் இருந்து சற்று பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக வசூல் குறைந்துள்ளது என சொல்லப்படுகிறது.

மேலும் உலகளவில் வேட்டையன் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்று பேசப்படுகிறது.

வசூல் 

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 10 நாட்களில் கடந்துள்ள வேட்டையன் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வேட்டையன் படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 232 கோடி வரை வசூல் செய்துள்ளது. உலகளவில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை என்றாலும் கூட, தயாரிப்பாளருக்கு வேட்டையன் படம் லாபம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-10-days-box-office-collection-1729392753

NO COMMENTS

Exit mobile version