Home சினிமா Netflix தளத்திலும் மாஸ் காட்டிய அஜித்தின் விடாமுயற்சி… டாப் 5ல் எந்த இடம் பாருங்க

Netflix தளத்திலும் மாஸ் காட்டிய அஜித்தின் விடாமுயற்சி… டாப் 5ல் எந்த இடம் பாருங்க

0

விடாமுயற்சி

அஜித்தில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது.

லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட், அதிலும் Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம்

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ. 34 கோடி வரை வசூல் செய்துள்ளது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலக அளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

ஓடிடி தளம்

திரையரங்கில் மாஸ் காட்டிய இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 3ம் தேதி வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான இப்படம் ஓடிடியில் மாஸ் செய்துள்ளது.

மார்ச் 3 முதல் 9 வரை ரிலீஸ் ஆன படங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது அஜித்தின் விடாமுயற்சி. 

NO COMMENTS

Exit mobile version