அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்களே இருக்கிறது. டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விடாமுயற்சி புக்கிங்கில் அதிக அளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இத்தனை கோடியா?
தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி விடாமுயற்சி ப்ரீ புக்கிங்கில் தற்போது 20 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் இதுவரை 12 கோடி ரூபாய் அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றது.