Home சினிமா விஜய் தேவரகொண்டா “கிங்டம்” படத்திற்கு தமிழ்நாட்டில் சிக்கல்! நீதிமன்றத்தை நாடிய படக்குழு

விஜய் தேவரகொண்டா “கிங்டம்” படத்திற்கு தமிழ்நாட்டில் சிக்கல்! நீதிமன்றத்தை நாடிய படக்குழு

0

 விஜய் தேவரகொண்டா நடித்து இருக்கும் கிங்டம் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

அதனால் தமிழ்நாட்டில் கிங்டம் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருக்கின்றனர்.

பாதுகாப்பு கேட்கும் படக்குழு

இந்நிலையில் கிங்டம் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

கிங்டம் படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

NO COMMENTS

Exit mobile version