முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் விஜய் கட்சிக்கு வந்தது சிக்கல்

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கான பெயருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம். சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்தார்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக

இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக டிவிகே (TVK) என்று குறிப்பிட்டு வந்தனர்.

நடிகர் விஜய் கட்சிக்கு வந்தது சிக்கல் | Vijay Party Tvk Name Faces Problem

இதனிடையே விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக டிவிகே என்று வழங்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வந்தது சிக்கல்

ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் துவங்கப்பட்டு கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

நடிகர் விஜய் கட்சிக்கு வந்தது சிக்கல் | Vijay Party Tvk Name Faces Problem

தமிழக வாழ்வுரிமை கட்சியும், ஆங்கிலத்தில் டிவிகே என்று வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்க கூடாது என முறையிடுவோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்