தமிழ்நாட்டின் முதல்வரும், நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.
“ஏ” சான்றிதழ்
நடிகர் விஜயின் கடைசி படம் என அறிவித்த இப்படம், தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை.
தேர்தல் முடிந்து, வெற்றிப்பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்ற பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், (ஜூலை 9) சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், ஜனநாயகன் படத்திற்கு “ஏ” சான்றிதழ் என குறிப்பிட்டுள்ளனர்.
படத்தில் ஆட்சேபனையான காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
படத்தின் வசூல்
பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் ஜனநாயகன்’, கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இதற்கு முன் விஜயின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.147 கோடியை வசூலித்தது. ‘தி கோட்’ படமும் முதல் நாள் ரூ.100 கோடியை தாண்டிய வசூலித்தது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதி விடுமுறை மற்றும் ரசிகர்களின் தொடர் ஆதரவு காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
கண்ணீர் மல்க ரசிகர்கள்
ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் முன்பே படத்தின் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கணித்தனர்.
ஆனால் அந்த கணிப்புகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.
படத்தின் டைட்டில் கார்டில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்’ நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
கடைசி காட்சியில் ரசிகர்கள் கண்ணீர் மல்க தளபதி தளபதி என்று கத்தும் காணொளிகளையும் அதிகமாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை காணமுடிகின்றது.
Source: https://ibctamil.com/article/vijay-s-jana-nayagan-box-office-collection-day-3-1785131236
