Home சினிமா வசூலில் மாஸ் காட்டிவரும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா…. இதுவரையிலான மொத்த வசூல்

வசூலில் மாஸ் காட்டிவரும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா…. இதுவரையிலான மொத்த வசூல்

0

மகாராஜா படம்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இரண்டாவதாக இயக்கிய படம் தான் மகாராஜா.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இப்படம் விஜய் சேதுபதிக்கு இது 50வது படம்.

இதில் அவரை தாண்டி அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாகி இருந்தது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா ரூ. 85 கோடி முதல் ரூ. 90 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படம் ரூ. 100 கோடியை எட்டி சாதனை படைக்கும் என்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/vijay-sethupathi-maharaja-movie-bo-collection-1719377075

NO COMMENTS

Exit mobile version