Home இலங்கை சமூகம் செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்! விஜய் தணிகாசலம் ஆதங்கம்

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்! விஜய் தணிகாசலம் ஆதங்கம்

0

தமிழினப்படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்  வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை மேற்கோள்காட்டி, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

செம்மணி பகுதியில் 1990களில் இலங்கை இராணுவத்தால் புரியப்பட்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் இங்கு புதைந்துள்ளதாகவும், இதற்கான ஒரு விசாரணையின் தேவையை அழுத்தமாக எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தணிகாசலத்தின் கருத்து

இந்நிலையில் தணிகாசலத்தின் இந்தக் கருத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் தமிழ் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போகிறது.

2021 ஜனவரியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையும், இலங்கையின் உள்நாட்டு நீதி விசாரணைகளின் தோல்வி காரணமாக சர்வதேச நடவடிக்கைகளின் தேவையை வலியுறுத்தியிருந்தது.

இதனால், செம்மணி புதைகுழி உள்ளிட்ட இடங்களில் நடந்த மீறல்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பது தமிழ் சமூகத்தின் நிலைப்பாடாக உள்ளது.  

இந்நிலையில் விஜய் தணிகாசலத்தின் கருத்து, செம்மணி விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதற்கு சர்வதேச விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version