Home இலங்கை குற்றம் யாழில் வன்முறைக்குழு அட்டகாசம்: வாகனங்களுக்கு தீ வைப்பு!

யாழில் வன்முறைக்குழு அட்டகாசம்: வாகனங்களுக்கு தீ வைப்பு!

0

யாழ்ப்பாணம்- மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வன்முறைக்குழு புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(13) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகி்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம்
தெரியாத குழு ஒன்று மேற்குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

தீ வைப்பு

இதன்போது, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த
முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதற்கு தீ வைத்தனர்.

அதே இடத்தில்
நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து வீட்டிலிருந்து எடுத்துச்
சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி
சந்தியில் வீதியின் நடுவில் தீ வைத்தனர்.

பொலிஸார் விசாரணை

 இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version