முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு விசா இல்லாத இலவச பயணம்! வெளிநாடொன்றுக்கு விரைவில் எட்டப்படவுள்ள வாய்ப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

பரஸ்பர அடிப்படையில் இலவச விசா பயண ஏற்பாட்டிற்கான உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க தாம் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது

பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் கைது

சிங்கப்பூர், இலங்கை இடையே இலவச விசா

இதேவேளை இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கலாசார மற்றும் பௌத்த சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.  

இலங்கைக்கு விசா இல்லாத இலவச பயணம்! வெளிநாடொன்றுக்கு விரைவில் எட்டப்படவுள்ள வாய்ப்பு | Visa Free Travel Between Sri Lanka And Thailand

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் முக்கிய அங்கத்துவ நாடான சிங்கப்பூருடன் ஏற்கனவே இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் விசா இல்லாத இலவச பயணம் இருந்தது.

உறுப்பு நாடுகளில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களில் ஆசியான் கடவுசீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியாவின் நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும் : விஜேதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

லிபியாவின் நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும் : விஜேதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்