வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கு தமிழ் மக்கள் அடம்பன் கொடியாய் மிடுக்குடன் அணிதிரள வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் கிருஷ்ணர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல தசாப்தங்களாக தமது இருப்புக்கும் உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கிறது.
முதுபெரும் இனமான தமிழினம், இத்தனை ஆண்டு காலமாக இலங்கை தேசத்தின் அரியாசன அதிகாரத்திற்கு அயலவரை தெரிவு செய்து எதனையுமே அடைந்திடாத ஏமாற்றத்தினால் அலுத்துப் போய் இருக்கிறது.
இவ்வேளை, பல்லின கலாச்சார பண்பாட்டினை கொண்ட மக்கள் வாழ்கின்ற இலங்கைத் தீவில், யார் யாரை ஆழ்வது என்கின்ற அரசியல் அதிகார போட்டிக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இத்தருணத்தில், குரலற்றவர்களின் குரல் அமைப்பினராகிய நாம், காலத் தேவை உணர்ந்து சமூக அக்கறையுடன் இந்த அறிக்கையினை பொதுக் களப்படுத்த கடமைப்படுகிறோம்.” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,