Home இலங்கை சமூகம் இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! உடனடியாக வைத்தியரை நாடவும்..

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! உடனடியாக வைத்தியரை நாடவும்..

0

டெங்கு நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் 11 மாவட்டங்களில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பெருக்கம்

அண்மையில் பதிவான கனமழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நுளம்புகளின் பெருக்கம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

அறிவுறுத்தல்

இவ்வாறான சூழலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version