Home இலங்கை சமூகம் மலையக வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

மலையக வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

0

நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பம்பரகலை வரையும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பனிமூட்ட நிலை

அவ்வப்போது ஏற்படும் அடர்ந்த பனிமூட்ட நிலை காரணமாக, இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும்போது, வாகனங்களின் முன்பக்க பிரதான விளக்குகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை மிகவும் கவனமாகவும், மெதுவாகவும் செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version