Home இலங்கை சமூகம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி காலி – மாத்தறை பேருந்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய லொறி, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் மீது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version