Home இலங்கை சமூகம் நீரை சேமித்து வைக்குமாறு வெளியாகியுள்ள அறிவிப்பு!

நீரை சேமித்து வைக்குமாறு வெளியாகியுள்ள அறிவிப்பு!

0

நீர் விநியோகத்தில் தடை ஏற்படவுள்ளதால் பொது மக்கள் தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.

கோரிக்கை

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என சபை தெரிவித்துள்ளது.

எனவே, இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைக்குமாறு அப்பகுதிகளில் உள்ள மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

Source: https://tamilwin.com/article/water-cut-in-sri-lanka-today-1726447101

NO COMMENTS

Exit mobile version