முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காய்கறி இதுதான்! என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா..!

வோட்டர் கிரஸ் (Watercress) எனப்படும் ஒருவகை காய்கறியை “உலகின் ஆரோக்கியமான காய்கறி” என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது.

இந்த வோட்டர் கிரஸ் (Watercress) நீர் நிலைகளில் எளிதாகவும், அதிகமாகவும் வளரக்கூடிய ஒரு கீரை இனமாகும்.

இதனை கொமன் கிரஸ் மற்றும் கார்டன் கிரஸ் என்றும் அழைப்பது வழக்கம்.

வோட்டர் கிரஸ் ஆனது முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, கடுகு மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஆகிய க்ரூஸிஃபிரஸ் (Cruciferous) காய்கறிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வர்க்கமாகும்.

இதில், உள்ள மருத்துவ குணங்களின் காரணமாகவே, மற்ற அனைத்து காய்கறிகளையும் விட ஆரோக்கியமான காய்கறியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக குணமடைய உதவும்

உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காய்கறி இதுதான்! என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா..! | Watercress Is The Healthiest Vegetable On Earth

இந்தக் காய்கறியானது நோய்த் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பளிப்பதுடன், நோய்களில் இருந்து வேகமாக குணமடையவும் உதவியாக இருக்கின்றது.

மிகக் குறைந்த கலோரி கொண்ட, சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் இந்த வோட்டர் கிரஸ் (Watercress) காணப்படுகின்றது.

உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த வோட்டர் கிரஸ் (Watercress) இனை உட்கொள்பவர்களுக்கு தசை வலி ஏற்படாது என்று கூறப்படுகிறது.

வோட்டர் கிரஸ் (Watercress) இல் ஏராளமான சத்துக்கள் அடமாகியுள்ளது.

விட்டமின் சி-யின் ஒரு சிறந்த மூலமாக இது திகழ்வதனால். சளி, தடிமன், தும்மல், இருமல் போன்ற நோய்த் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றது.

 தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அழிக்கும்

உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காய்கறி இதுதான்! என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா..! | Watercress Is The Healthiest Vegetable On Earth

இதில், அதிக அளவு இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் விட்டமின் கே என்பன அடங்கியுள்ளது.

இது மூளையிலுள்ள செல்கள் சேதமடைவதைத் தடுத்து சுறுசுறுப்பான ஆற்றலை அளிக்கின்றது.

அதுமாத்திரமல்லாமல், சேதமடைந்த செல்களை குணப்படுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அழிக்கும் சக்தி வாய்ந்ததாகவும் திகழ்கிறது.

தோடை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களைக் காட்டிலும் வோட்டர் கிரஸ் (Watercress) இல் அதிகளவு விட்டமின் சி அடங்கியுள்ளது

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்

உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காய்கறி இதுதான்! என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா..! | Watercress Is The Healthiest Vegetable On Earth

வோட்டர் கிரஸ் (Watercress) வழங்குகின்ற விதிவிலக்கான ஆரோக்கிய நன்மைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல், மனஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த வோட்டர் கிரஸ் (Watercress) இன் சாறினை அருந்தும் போது புற்றுநோய் செல்கள் உருவாகி, வளர்வதைத் தடுத்து ஆரோக்கியம் அளிக்கிறது.

உலகின் ஆரோக்கியமான காய்கறியாக வோட்டர் கிரஸ் (Watercress) இனை உணவில் சேர்த்து எமது ஆரோக்கியத்தை பேணிக்கொள்வோம்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்