Home இலங்கை குற்றம் வத்தளையில் இடம்பெற்ற கொடூரக் கொலை :இறந்தவரது மனைவி அளித்த வாக்குமூலம்

வத்தளையில் இடம்பெற்ற கொடூரக் கொலை :இறந்தவரது மனைவி அளித்த வாக்குமூலம்

0

வத்தளைப் பகுதியில் நேற்றிரவு(19) இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது அங்கு மூன்று நபர்களைக் அந்தப் பெண் கண்டதாகவும் அதில் ஒருவர் தனது கணவரைக் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்த மூவரில் ஒருவர்

மேலும் தாக்குதல் இடம்பெற்ற போது அங்கிருந்த மூவரில் ஒருவர் தனது மூத்த பிள்ளையை துரத்திச் சென்றதாகவும் தன்னையும் தாக்குதலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த தாக்குதலின் போது பிள்ளைகள் மூவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கொலை செய்யப்பட்டவரது மனைவி தெரிவித்துளார்.

முற்பகை காரணமாக கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொலைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version