முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம்

பூகோள அரசியல் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்திய போட்டித்தன்மையிலே
சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம்
இயங்குவதாக தாங்கள் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’ மற்றும் ‘லிகான் ஓமா’ ஆகிய
இருவருடனும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’
என்பவருடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (09.02.2024) மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

நல்லிணக்கம்

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மேற்கத்தேய நாடுகளுக்கும், இந்தியா போன்ற நாடுகளுக்கும் சார்பான ஒரு நபராக
கருதப்படுகின்றதனாலும், இந்த வருடம் ஒரு தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலும்  இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயக கொள்கைகள் அனைத்ததையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம் | We Believe United States Operating Contain China

அந்த வகையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம், வரவிருக்கின்ற பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டம் போன்றன நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும்
நிரந்தரமாக முடக்குவதற்குரிய சட்டங்களாக காணப்படுகின்றது.

இந்நிலையில், இனிவரப்போகும் உண்மை மற்றும் நல்லிணக்கம்
குறித்த சட்ட விடயங்களையும் அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரித்து சிங்கள பௌத்த இனவாத சக்திகள்
மட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்தெடுத்து மக்களுடைய வாக்கு வங்கியை முழுமையாக கைப்பற்றி
ஆட்சிக்கு வருவதற்கு முனைப்பு காட்டி வருகின்றார்.

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

மனித உரிமை

பூகோள அரசியல் காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்க மேற்கு சார்ந்த, இந்தியா
சார்ந்த ஒரு விசுவாசியாக இருப்பதால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும்
அரசு என்பன ரணில் விக்ரமசிங்க பாரதூரமான மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத
செயற்பாடுகளை செய்கின்ற போதும், பெருமளவில் அதனை எதிர்க்காமல் அமைதியாக இருக்கின்ற தன்மை
காணப்படுகின்றது.

ஆகவே, இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு செனட் சபையில் இருக்கக் கூடிய
உறுப்பினர்களும் கீழ் சபையில் இருக்கக் கூடிய காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது
குரலை எழுப்பி அழுத்தங்களை உருவாக்க வேண்டும்.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

அவ்வாறு இன்றி இந்த நிலைமைகளில்
மாற்றங்களைக் கொண்டு வருவது கடினமாக இருக்கும்.

எனினும், பொருளாதார ரீதியாக முழுமையாக இலங்கை மேற்கத்தைய நாடுகளிலேயே தங்கியிருக்க
வேண்டிய நிலை காணப்படுகின்றது.

சர்வதேச விசாரணை

ஆகவே இப்படிப்பட்ட விடயங்களுக்கு அமெரிக்காவில் இருக்கக் கூடிய
நிர்வாகத்துக்கு முற்போக்குவாத சிந்தனையோடு செயற்படுகின்ற காங்கிரஸ்
உறுப்பினர்கள் என்ற வகையில் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும் என்பதுடன் மிக
அவசரமாக செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.

சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம் | We Believe United States Operating Contain China

அத்தோடு, எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய தமிழ்த் தேசத்தினுடைய சுயநிர்ணய
உரிமையை அங்கீகரித்து அந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வலியுறுத்தி அமெரிக்க அரசு
அங்கீகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொறுப்புக் கூறல்
தொடர்பாகவும் முழுமையான சர்வதேச விசாரணையை நிலை நாட்டுவதற்கு நேரடியாக
குற்றவியல் நீதிமன்றம் போன்ற விடயங்களை வலியுறுத்தி பொறுப்புக்கூறல்
சம்பந்தமாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அவர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்
என்பதையும் வலியுறுத்தியிருந்தோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டள்ளார்.

கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்