Home உலகம் படகில் மோதி துடித்துடித்து பலியான திமிங்கலம்: தீயாய் பரவும் காணொளி!

படகில் மோதி துடித்துடித்து பலியான திமிங்கலம்: தீயாய் பரவும் காணொளி!

0

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி கடல் பகுதியில் ஒரு திமிங்கலம் படகுடன் மோதியதில் காயமடைந்து உயிரிழந்துள்ளது.

நேற்று நடந்த இந்த நிகழ்வின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சம்பவத்தின் போது, ஒரு 20 அடி நீளமுள்ள திமிங்கலம் வேகமாக முன்னேறி வந்து, கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகின் மீது மோதியுள்ளது. 

உடற்கூறு ஆய்வு

மோதிய வேளையில், படகின் பின்புறத்தில் இருந்த கூரிய உதிரிப்பாகங்கள் திமிங்கலத்தின் முகத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. காயத்தால் துடித்த திமிங்கலம், கடலில் திக்குமுக்காடியது.

சிறிது நேரத்தில், கடற்கரைக்கு அருகே சென்ற திமிங்கலம், அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூறு ஆய்வுக்காக திமிங்கலத்தின் உடல் நாளை உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version