Home தொழில்நுட்பம் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

0

உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களின் தனி உரிமை

சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்றுவதற்கு விசேட அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version