Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி: கருத்துக் கணிப்புகள் ஆரம்பம்

அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி: கருத்துக் கணிப்புகள் ஆரம்பம்

0

 சிறிலங்கா அதிபர் தேர்தல் கள நிலவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றது.

இவ்விடயம்  தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கையை மே நடுப்பகுதியில் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கபடவுள்ளதாக  தெரியவருகின்றது.

தென்கொரியாவில் குடியேறப்போவதாக வெளிவந்த தகவல்: முற்றிலும் நிராகரித்த மைத்திரி

கருத்துக் கணிப்பு அறிக்கை

எதிர்வரும் அதிபர்  தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் தற்போது இருக்கும் அதிபர், மேற்படி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இறுதியானதொரு முடிவை எடுத்து அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பனவும் கிராமிய மட்டத்தில் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருகின்றன.

இதன்போது பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பிரச்சார வியூகம் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான உள்ளடக்கங்களும் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 

ரணில் இல்லையேல் மீண்டும் வரிசை யுகம்: வஜிர அபேவர்தன எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version