Home இலங்கை குற்றம் படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

0

குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம்(07) இரவு
இடம்பெற்றுள்ளது.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே வெட்டிப் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை

இந்தக் கொலைச் சம்பவம் நீண்ட காலமாக நிலவிய குடும்பத் தகராறினால்
இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version