Home இலங்கை சமூகம் வழிமாறி திரிந்த காட்டு யானைக்கூட்டம் : அச்சத்தில் மக்கள்

வழிமாறி திரிந்த காட்டு யானைக்கூட்டம் : அச்சத்தில் மக்கள்

0

கடந்த 04 நாட்களாக வழிமாறி திரிந்த காட்டு யானை கூட்டத்தினால் களுவாஞ்சிக்குடி
பிரதேசத்தின் நகர்ப்பகுதிகளிலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பு வாவியை நீர் வழியாகவே ஊடறுத்துச் செல்லும் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் திசை மாறி
தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிந்துள்ளன.

பயிர்களையும் பயன்தரு மரங்களையும்

இவ்வாறே புதுக்குடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம்,
மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, எருவில், மகிழூர் ஊடாகச்
சென்று திங்கட்கிழமை இரவு கோட்டைக்கல்லாறு ஆற்றங்கரையை அண்மித்த புதர்
காடுகளில் அந்த 3 காட்டு யானைகளும் தரித்த நின்றுள்ளதாக அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர்.

காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதியினால் ஊடறுத்துச் செல்லும்போது
பயிர்களையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம்
வினோராஜ் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் காட்டு யானைகள் திடீரென தமது
பிரதேச நகர்ப்பகுதிக்குள் உள்நுழைந்துள்ளமை குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு
பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியில்
பொதுமக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனவரினதும் ஒத்துழைப்புடன்
வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவினர் 3 காட்டு யானைகளையும், மீண்டும்
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து படுவாங்கரைப் பகுதிக்குள் துரத்தி
அனுப்பி விட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version