Courtesy: H A Roshan
காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (22.08.2024) குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள்
முன்னர் அழைப்பு விடுக்கப்பட் தினங்களில் சாட்சியமளிக்க தவறிய காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் இன்று சாட்சியமளித்தனர்.
இதில் மொத்தமாக 31 உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
