முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருக்கோணமலையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

திருக்கோணமலை -மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு
துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக இன்று (29) சோதனைகளை மேற்கொண்ட
போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகின்றது.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போதைப் பொருள் தடுப்பு 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38வயது) என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், அந்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த
நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதை
பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன்
கைது செய்யப்பட்டு திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று
வருவதாகவும் கூறப்படுகிறது.

திருக்கோணமலையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது | Woman Arrested For Selling Ganja In Trincomalee

இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு
வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி
வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின்
பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின்
குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா
கைப்பற்றப்பட்டுள்ளது.

திருக்கோணமலையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது | Woman Arrested For Selling Ganja In Trincomalee

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின்
பின்னர் திருக்கோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு: அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு: அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்