Home இலங்கை சமூகம் கொழும்பு புறநகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய பெண்

கொழும்பு புறநகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய பெண்

0

வத்தளை காவல்துறையினரால் T-56 துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை, ஹெகித்த வீதியில் உள்ள ஒரு தங்குமிடத்தின் அறையில் பெண்ணொருவர் மயங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளியலறையில் மயக்கமடைந்து இருந்த நிலையில், விழித்து கொண்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரிடமிருந்து 6.1 கிராம் ஐஸ் போதைப்பொருளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 35 வயதான இந்த பெண் சந்தேகநபர் உடனடியாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக ஒப்படைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்தத் தகவலின் அடிப்படையில், றாகமையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், அவரது கூட்டாளியென்று நம்பப்படும் ஒருவர் வீட்டில் இருந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியையும் 113 தோட்டாக்களையும் மீட்டுள்ளனர்.

இதன்படி, பெண் சந்தேகபரின் 40 வயதான கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version