Home இலங்கை சமூகம் சாரதியின் தூக்கக் கலக்கத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கதி

சாரதியின் தூக்கக் கலக்கத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கதி

0

சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியிலிருந்து விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் கஹடகஸ்திகிலிய (Kahatagasdigiliya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகெலியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கம்

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் பின்புற இருக்கையில் பயணித்த இரண்டு ஆண்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.

உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

வெளிநாட்டவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இதேவேளை, பெந்தொட்ட – வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

83 வயதுடைய ஜேர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version