Home இலங்கை சமூகம் வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்!

வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்!

0

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பொதுமக்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ரூ. 1,340,000 மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பை (Colombo) சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நாரஹேன்பிட்டி காவல்துறைக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், கொழும்பு 05 ஐச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட பெண் நேற்று நாரஹேன்பிட்டி காவல் நிலையத்திற்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, விசாரணைகளில், கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம், வெள்ளவத்தை, வாதுவ, மீகஹவத்த, ஹபராதுவ மற்றும் கிரியுல்ல ஆகிய காவல் நிலையங்களில் சந்தேகநபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, நாரஹேன்பிட்டி காவல்துறை குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.youtube.com/embed/sT-gXeqEEOc

NO COMMENTS

Exit mobile version