Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த பெண் – பொதுமக்களிடம் காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த பெண் – பொதுமக்களிடம் காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

0

வவுனியா (Vavuniya) மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின்
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்திருந்தார்.

அடையாளம் காணப்படவில்லை

குறித்த பெண்ணின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் தற்போது
வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தபெண் இதுவரை காவல்துறையினரால் அடையாளம் காணப்படவில்லை.

எனவே அவரது
உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமை காவல் நிலைய போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.youtube.com/embed/XN7apHzvI3E

NO COMMENTS

Exit mobile version