தலவாக்கலை(Talawakelle) – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை(14) மாலை நடைபெற்றுள்ளது.
சடலம் மீட்பு
நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைந்துள்ள பிரதான அணைக்கட்டுக்கு அருகில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட போது, நீர்த்தேக்கத்தின் கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.