நுவரெலியா காட்டுப்பகுதியொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றையதினம் (12.09.2024) நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப் பகுதியில் வைத்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் குறித்த காட்டுப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண்ணே இவ்வாறு
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/woman-s-body-recovered-from-nuwara-eliya-forest-1726191913
