கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (20.04.2025) இடம்பெற்றுள்ளது.
58 வயதுடைய பெண்ணொருவர் தனது
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
இதன்போது குறித்த பெண் அணிந்திருந்த ஆடையில்
தீப்பற்றியுள்ள நிலையில் அவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
