Home இலங்கை குற்றம் யாழில் உள்ள புடவையகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண்!

யாழில் உள்ள புடவையகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண்!

0

யாழில் உள்ள புடவையகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையொன்றை ஒரு பெண் எடுத்து செல்லும் காட்சி சிசிரிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த 18ஆம் திகதி யாழில் உள்ள புடவையகம் ஒன்றுக்கு சென்ற பெண்ணொருவர் அங்கு
தனது கைப்பையை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

கைப்பையை எடுத்துச் சென்ற பெண்

அந்த கைப்பையில் ஒருதொகை
பணம், கைபேசி மற்றும் தன்னியக்க இயந்திர அட்டை (ATM card) என்பன உள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அந்த கைப்பையை வேறு பெண்ணொருவர் எடுத்து செல்வது அங்குள்ள சிசிரிவி கமெராவில்
பதிவாகியுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version