முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஞ்சித் பண்டார மீது பெண் ஒருவர் அளித்த முறைப்பாடு: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் இணைப்புச் செயலாளரான பெண் ஒருவர்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில், தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் மகளிர் விவகாரம், முன்பள்ளிகள் மற்றும் அழகு துறை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்சிலா செனவிரத்ன என்ற பெண்ணே பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

யாழ்ப்பாணம் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை

 விசாரணைகள் ஆரம்பம்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பேராதனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் பண்டார மீது பெண் ஒருவர் அளித்த முறைப்பாடு: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை | Womans Complaint Against Ranjit Bandara Police

எனினும், குறித்த பெண் தமது கருத்தை திரிபுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் தாமும் பேராதனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் பண்டார தொலைபேசியில் அச்சுறுத்தியதையும் ஊடகங்களில் குறித்த பெண் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவிகளில் இருந்து ஒதுங்குங்கள் : ராஜபக்சாக்களிடையே ஓங்கி ஒலித்த குரல்

பதவிகளில் இருந்து ஒதுங்குங்கள் : ராஜபக்சாக்களிடையே ஓங்கி ஒலித்த குரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்