Home இலங்கை சமூகம் பேருந்து ஒன்றிற்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பேருந்து ஒன்றிற்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்திற்குள் பெண் ஒருவர் மீது கூர்மையான ஆயுத்ததால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் இருந்து பதுளைக்கு இன்று காலை செல்லவிருந்த பேருந்திற்குள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது பேருந்தின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் பிடிக்கப்பட்டு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.


குடும்ப தகராறு

பின்னர் பொலிஸார் வந்து அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண் பண்டாரவளை, லியங்கஹவெல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்த பெண் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தியதலாவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தியத்தலாவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version