Home விளையாட்டு உலக கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி: கிடைக்கப்போகும் மிகப்பெரிய பரிசுத் தொகை

உலக கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி: கிடைக்கப்போகும் மிகப்பெரிய பரிசுத் தொகை

0

 பெண்கள் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மிகப்பெரிய பரிசுத் தொகை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி, அணியின் வீராங்கனைகள் மற்றும் துணை ஊழியர்களுக்கு 51 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.

முதல் ஒருநாள் உலகக் கோப்பை

இந்த ஆண்டு மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையில், நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் அணி தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

அந்த வெற்றிக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடமிருந்து 4.48 மில்லியன் டொலர் பரிசுத் தொகையும் அவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version