Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஏற்பட்ட கவலை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஏற்பட்ட கவலை

0

தான் என்ன செய்தாலும்தனக்கு நோபல் பரிசு(nobel prize) கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது,

 “கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டா குடியரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் போரில் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். இரு நாடுகளின் தலைவர்களும் திங்கள்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வோஷிங்டன் வருகிறார்கள். இது ஆபிரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு சிறந்த நாள்! இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.

நோபல் பரிசு கிடைக்காது

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா – கொசோவோ, எகிப்து – எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையேயான அமைதியை ஏற்படுத்தியதற்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

மேலும் மத்திய கிழக்கில் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.

4 அல்லது 5 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும்

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, மக்களுக்குத் தெரியும் என்னுடைய பணி. எனக்கு அதுதான் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று(20) வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய ட்ரம்ப், “நான் இதுவரை 4 அல்லது 5 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் எனக்கு தரமாட்டார்கள், தாராளவாதிகளுக்குத்தான் தருவார்கள்” என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version