Home இலங்கை குற்றம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய நபரை தேடும் பொலிஸார்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய நபரை தேடும் பொலிஸார்

0

வெளிநாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட முகவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊடாக இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.


பண மோசடி

வெளிநாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

0718591643 அல்லது 0718137373 என்ற மிரிஹான பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/working-for-sri-lanka-in-united-kingdom-1718021145

NO COMMENTS

Exit mobile version