Home இலங்கை இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்

இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்

0

Courtesy: Sivaa Mayuri

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) இன்று(28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 உலங்கு வானூர்தி ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை படையினர்

2014 முதல், மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளுக்காக இலங்கை ஏற்கனவே மூன்று எம்ஐ-17 உலங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/world-s-largest-cargo-plane-lands-in-sri-lanka-1719589090

NO COMMENTS

Exit mobile version