முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த X-Press Pearl கப்பல்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

2021 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், இச்சம்பவம் இலங்கையின் சுற்றாடலுக்கும் கடலுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவ சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையின் சுற்றாடல் மற்றும் பெருங்கடலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணைகள்

அத்தோடு , கடந்த நீதிமன்ற வழக்குகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்றக் குழுக்களின் அறிக்கைகள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தானும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த X-Press Pearl கப்பல்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | X Press Pearl Disaster Sri Lanka New Govts Probe

அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற X-Press Pearl என்ற கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு கடற்கரையில் தீப்பிடித்ததால், அதன் சரக்குகள் பல கடலில் கவிழ்ந்தன.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இரசாயனங்கள் உட்பட பல்வேறு சரக்குகள் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் மேற்கு மாகாண கரையோரப் பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த X-Press Pearl கப்பல்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | X Press Pearl Disaster Sri Lanka New Govts Probe

இதேவேளை, 2023 ஓகஸ்ட், கப்பலின் உரிமையாளர்கள் தீயினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு 301 மில்லியன்இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்