Home சினிமா ரஜினிகாந்த் என்னை துப்பியதாக தோன்றும்.. ஓப்பனாக சொன்ன நடிகர் யோகி பாபு

ரஜினிகாந்த் என்னை துப்பியதாக தோன்றும்.. ஓப்பனாக சொன்ன நடிகர் யோகி பாபு

0

யோகி பாபு 

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். இவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக ‘போட்’ படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

யோகி பாபு ஓபன் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து யோகி பாபு பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” தர்பார் படத்தில் இருந்து ரஜினிகாந்துடன் பணியாற்றி வருகிறேன். நாலு முறை ரஜினியை பார்த்துள்ளேன். இப்போதும் நானும் நெல்சனும் இருக்கும்போது ரஜினிகாந்த் வந்து நெல்சனிடம், ‘கோலமாவு கோகிலா படத்தை நான்கு முறை பார்த்தேன்’ என்று கூறுவார்.

அதேபோல் மண்டேலா பார்த்தேன் என்று சொல்வார். அவருக்கு என் நடிப்பில் இந்த இரண்டு படங்கள் மிகவும் பிடிக்கும்.

அதே சமயம் நான் நடித்த இன்னும் சில படங்களை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்படி இருந்தது என்பார். உடனே எனக்கு அய்யயோ காறி துப்பிட்டாரே என தோன்றும்” என்று தெரிவித்துள்ளார்.    

Source: https://cineulagam.com/article/yogi-babu-open-talk-about-rajinikanth-1749725356

NO COMMENTS

Exit mobile version